வியாழன், 27 அக்டோபர், 2016

MANBAYEE ALIM

MANBAYEE ALIM


லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொருளாலர் மௌலானா மௌலவி முஹம்மது முஹ்ஸீன் மன்பஈ ஹள்ரத் மறைவு !!!

Posted: 26 Oct 2016 03:23 AM PDT


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொருளாலர்,
 தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை யின் செயர்குழு 
உறுப்பினரும் மிக நீன்ட காலமாக முபாரக் ஜும்ஆ பள்ளியின் 
மக்தப் ஆசிரியராக பணிசெய்த மௌலானா  மௌலவி
முஹம்மது முஹ்ஸீன் மன்பஈ ஹள்ரத் அவர்கள் 
26-10-16 இன்று காலை வஃபாத் ஆகிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மௌலவி அவர்களின் நல்லறங்களையும்,
மார்க்க சேவைகளையும், ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும், மன்பயீ ஆலிம் இணைய தளத்தினர் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் உயர்மட்ட குழு அவசர ஆலோசனை க்கூட்டம் !!!

Posted: 26 Oct 2016 03:08 AM PDT


தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை உயர்மட்ட குழுவின்,  
அவசர ஆலோசனைக் கூட்டம் மதுரையில் புதிதாக கட்டப்பட்டு 
வரும் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைமையகத்தில்
 22-10-16 சனிக்கிழமை அன்று மாநில தலைவர் மவ்லானா 
மவ்லவி ஷைகுல் ஹதீஸ் A.E.M.அப்துற்றஹ்மான் ஹள்ரத் 
தலைமையில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்..


இக்கூட்டத்தில் நம்முடைய உயிறினும் மேலான ஷரீயத் 
சட்டத்தின் உரிமையாக இருக்ககூடிய, முஸ்லீம் தனியார் 
சட்டத்திற்கு எதிராகவும்,பல சமூகத்தினர்கள் ஒற்றுமையாகவும், 
அமைதியாகவும் வாழக்கூடிய நம்முடைய இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும்,அமைதிக்கும் எதிராக உள்ள பொதுசிவில் சட்டத்தை நடைமுறைபடுத்த முற்சிக்கும் மத்திய அரசுக்கு நம்முடைய 
எதிர்பை தெரிவிக்கும் முகமாகவும், முஸ்லீம் தனியார் சட்டம் ஆண்,
பெண் இருசாராருக்கும் பாதுக்காப்பாகவே உள்ளது. என்ற நம்முடைய நிலைபாட்டைதெரிவிக்கும் முகமாக, ஆல் இந்தியா முஸ்லீம் பர்சல் 
லா போர்டின் வழிகாட்டுதலின் படி தமிழகம் முழுதும் கையெழுத்து 
இயகத்தை நடத்துவது,மேலும் நீதி மன்றத்தின் உத்தரவின் 
படி காவேரி மேலான்மை குழு அமைக்க, மத்திய அரசை 
வலியுறுத்துதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம்

Posted: 26 Oct 2016 02:50 AM PDT

பொது சிவில் சட்டம் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரானதாகவே 
அமையும் என்பதை வழியுரித்தியும் நம் ஷரீயத் சட்டத்தை 
காத்திடவும் மேலும் திருமணம், தலாக், குலா, பஸ்க், குழந்தை 
வளர்ப்பு ,வாரிசு உரிமை போன்ற சட்டங்கள் நம்முடைய 
தனியார் சட்டம் வாயிலாக பெண்களுக்கு பாதுக்காப்பாகவே 
உள்ளது என்பதை வலியுறுத்தியும் ஆல் இந்தியா லா கமிஷனுக்கு 
நம்முடைய நிலைப்பாட்டை தெறிவிக்கும் முகமாக சமூதாய 
மக்களிடத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.
அதன் ஒரு கட்டமாக 17-10-16 அன்று லால்பேட்டை ஜாமிஆ 
மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில், தமிழ் மாநில 
ஜமாஅத்துல் உலமா சபை தலைவர்,கடலூர் மாவட்ட 
அரசு காஜி ,கல்லூரியின் பேராசிரியர்கள்,நிர்வாகிகள் 
கையெழுத்து இட்டனர்.

லால்பேட்டையில் தியாகத்திருநாள் சிறப்பு தொழுகை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு !!!

Posted: 26 Oct 2016 02:36 AM PDTdscn0009
லால்பேட்டையில்,செப்டம்படர் 13-09-2016 அன்று ஈதுல் 
அல்ஹா எனும் தியாகத் திருநாள்,, வெகு 
சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இருந்து தக்பீர் முழக்கத்துடன் 
ஜமாஅத்தார்கள் ஈத்கா பள்ளியை வந்தடைந்தனர்.
 சரியாக 6.45 மணிக்கு  தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா 
சபையின் தலைவரும்,ஜாமிஆ மன்பவுல் அன்வார் 
அரபுக்கல்லூரியின் பேராசிரியருமான,அல்லாமா ஷைகுல் ஹதீஸ் 
மௌலானா முஹம்மது அப்துர் ரஹ்மான் 
ஹழ்ரத் அவர்கள் சிறப்பு பயான் செய்தார்கள். ஜாமிஆ 
மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின்  முதல்வர் மௌலானா
நூருல் அமீன் ஹழ்ரத் அவர்கள் 7.00 மணிக்கு பெருநாள் தொழுகை 
நடத்தி உலக மக்களுக்காக சிறப்பு துஆ செய்தார்கள்.


இதேபோல் எள்ளேரி, ரம்ஜான் தைக்கால், காட்டுமன்னார்கோவில், 
கொள்ளுமேடு, ஆயங்குடி, மானியம் ஆடூர், கந்தகுமரன் 
உள்பட பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் 
சிறப்பு தொழுகை நடைபெற்றது.

கருத்துகள் இல்லை: