செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

MANBAYEE ALIM

MANBAYEE ALIM


கடலூரில் மாபெரும் ஷரீஅத் விளக்க மாநாடு !!!

Posted: 15 Feb 2016 06:55 AM PST

கடலூரில் வரும் பிப்ரவரி 21 ந்தேதி கடலூர் மாவட்ட 
ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும் மாபெரும் 
ஷரீஅத் விளக்க மாநாடு

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லுரியின் 153 ஆம் ஆண்டின் நினைவு சிறப்பு மலர் !!

Posted: 15 Feb 2016 06:41 AM PST

நமது ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லுரியின் 153 ஆம் ஆண்டின் நினைவாகவும், 72 வது பட்டமளிப்பு விழா நினைவாகவும், ஒரு சிறப்பு மலர் வெளியிட கோசி பிரிண்டர்ஸ் நிறுவனம் முயற்ச்சி செய்துள்ளது. இந்த மலர் சிறப்பாக உருவாக அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.லால்பேட்டையில் நடைபெற்ற ஷிர்க் விளக்க பொதுக்கூட்டம் !!!

Posted: 15 Feb 2016 06:32 AM PST

5

லால்பேட்டைநகர ஜமாஅத்துல் உலமா  முஸ்லிம் ஜமாஅத் 
நடத்திய ஷிர்க் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம்,
26.01.2016 அன்று  அசர் தொழுதபின் முதல் அமர்வு தொடங்கியது. 
ஹாஜி அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். மௌலானா 
மௌலவி காரி முஹம்மது ஹஜ்ரத் கிராஅத் ஓதினார். 
மௌலவி முஹம்மது அஸ்அத் வரவேற்றார். மௌலவி 
எம்.ஒய். முஹம்மது அன்சாரி தொடக்க உரையாற்றினார். 
மௌலவி ஜாகிர்ஹுசைன் ஹஜ்ரத் அறிமுக உரையாற்றினார்.
1
அத்துடன் முதல் அமர்வு முடிவுற்று
ம ஃரிப் தொழுகை இடைவேளை விடப்பட்டது. தொழுகைக்கு 
பின் மௌலானா மௌலவி, Jma முதல்வர் அரசு காஜி 
நூருல்அமீன் ஹஜ்ரத் தலைமை ஏற்று உரையாற்றினார்.
தொடர்ந்து மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் 
மௌலானா மௌலவி அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களும், 
வேதாளை மஹ்மூது ரிபாயி ஹஜ்ரத் அவர்களும் உரையாற்றினர்.
இறுதியாக மௌலானா மௌலவி ஹாமித் பக்ரி ஹஜ்ரத் 
சிறப்பான எழுச்சியுரையாற்றினார். மௌலவி 
சலாஹுத்தீன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை: