வியாழன், 27 ஆகஸ்ட், 2015

Sadhak Maslahi

Sadhak Maslahi

மறைந்தும் மறையாமல்...

Posted: 26 Aug 2015 06:29 PM PDT

அருமையான வெண்கலக்குரலில் வேந்தர் நபி பற்றி பாடல்!
 கேட்க... பதிவிறக்கம் செய்ய...

மறைந்தும் மறையாமல் மறைந்து மதீனாவில் வாழும் மஹ்மூதரே

என்றும் மறையா மறை தந்து மறையா புகழ் கண்டு மறைந்த மா மன்னரே

மனிதகுலம் வாழ மனிதராய் பிறந்த மனிதரில் புனிதரே
மன்னில் மடைமை இருள் அகற்றி மார்க்கஒளி ஏற்றி மகிழ்ந்த நபிநாதரே

வானில் ஒளி வீசும் மதியின் அழகு உந்தன் அழகிற்கு இனையாகுமோ நபி அழகிற்கு இனையாகுமோ

வார்த்தை முழுவதும் நான் வார்த்து தொகுத்தாலும் வாழ்த்து நிறைவாகுமோ நபி வாழ்த்து நிறைவாகுமோ

நபிகள் எல்லோரும் நபியே உன் வரவை நவின்று சென்றார்களே
அன்று நாயன் ரஹ்மானை நபியே உன் பின்னே நின்று தொழுதார்களே.

மறைந்தும் மறையாமல் மறைந்து மதீனாவில் வாழும் மஹ்மூதரே
என்றும் மறையா மறை தந்து மறையா புகழ் கண்டு மறைந்த மா மன்னரே

கனவில் எனை கண்டோர் எனையே கண்டார்கள் என்று உரைத்தீர்களே நபி அன்று உரைத்தீர்களே

கருனை முகமதுவை கனவில் நான் கான இன்று வருவீர்களே நபி இன்று வருவீர்களே

உம்மி நபிஉங்கள் உம்மத்தான என்னை அன்று சுவனத்திலே
உங்கள் அருகில் அமரவைத்து உவகை கண்டினரே உதவி செய்வீர்களே

மறைந்தும் மறையாமல் மறைந்து மதீனாவில் வாழும் மஹ்மூதரே
என்றும் மறையா மறை தந்து மறையா புகழ் கண்டு மறைந்த மா மன்னரே
மனிதகுலம் வாழ மனிதராய் பிறந்த மனிதரில் புனிதரே
மன்னில் மடைமை இருள் அகற்றி மார்க்கஒளி ஏற்றி மகிழ்ந்த நபிநாதரே

உலாவும் தென்றல் காற்றலையே...

Posted: 26 Aug 2015 05:13 PM PDT

கருத்துகள் இல்லை: