வெள்ளி, 29 மே, 2015

MANBAYEE ALIM

MANBAYEE ALIM


கொள்ளுமேடு மதரஸா அன்வாருல் ஹூதா பெண்கள் மதரஸா 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது

Posted: 28 May 2015 12:06 AM PDT

 கொள்ளுமேட்டில் இயங்கி வரும் மதரஸா அன்வாருல் ஹூதா பெண்கள் மதரஸா 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழா (18-05-2015) அன்று கொள்ளுமேடு ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்றது.
IMG-20150518-WA0007
கடலூர் மாவட்ட அரசு தலைமை காஜியும்,லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் முதல்வருமான மௌலானா அல்லாமா நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கி தேர்வு பெற்ற மாணவிகளுக்கு முபல்லிகா 
பட்டத்தை வழங்கினார்.

கொள்ளுமேடு ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மௌலவி எம்.எஸ்.நிஸார் அஹமது ஹஜ்ரத் வரவேற்புரையாற்றினார். கடலூர் மாவட்ட ஜமாஅதுல் உலமா சபை தலைவர் மௌலானா ஏ.சஃபியுல்லாஹ் ஹஜ்ரத் துவக்கவுரையாற்றினார்.
IMG-20150518-WA0006-1024x576
விருதாச்சலம் வட்டார ஜமாஅதுல் உலமா சபை தலைவர் மௌலவி ஆர்.அப்துல் கனி இன்ஆமி ஹஜ்ரத், கொள்ளுமேடு மஸ்ஜிதுத் தக்வா பள்ளி இமாம் மௌலவி ஏ.ஹலீலுல்லா பையாஜி ஹஜ்ரத், கொள்ளுமேடு மதீனா பள்ளி இமாம் மௌலவி எம்.கே.இம்தாதுல்லாஹ் மன்பயீ ஹஜ்ரத் மற்றும் கொள்ளுமேடு வாழ் உலமா பெருமக்கள் வாழ்த்துரை வழங்கினர்.

சென்னை மாவட்ட ஜமாஅதுல் உலமா சபை தலைவர் மௌலானா மௌலவி ஜி.எம்.தர்வேஷ் ரஷாதி ஹஜ்ரத் சிறப்புரையாற்றினார்.
IMG-20150518-WA0009
மௌலவி ஏ.முஹம்மது உஸ்மான் மன்பயீ நன்றியுரையாற்றினார்.

பெண்களுக்கான சிறப்பு பயான்
IMG-20150517-WA0007
முன்னதாக பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு (17-05-0215) அன்று இரவு பெண்களுக்கான சிறப்பு பயான் ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

IMG-20150518-WA0000
இந்நிகழ்வில் புதுச்சேரி சுல்தான்பேட்டை இன்ஆமுல் உலூம் பெண்கள் மதரஸாவின் ஆசிரியர் எம்.ஐ.பரக்கத் நிஸா ஆலிமா சிறப்புரையாற்றினார்.இதில் ஏராளமான தாய்மார்களும்,இளம் பெண்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளை கொள்ளுமேடு ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகக் கமிட்டியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

மானியம் ஆடூரில் நடைபெற்ற பாத்திமா(ரலி) லில்பனாத் மகளிர் அரபி கல்லூரியின் 12ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

Posted: 27 May 2015 11:59 PM PDT

 மானியம் ஆடூரில் இயங்கி வரும் பாத்திமா(ரலி) லில்பனாத் மகளிர் 
அரபி கல்லூரியின் 12ம் ஆண்டு பட்டமளிப்பு விழா 18.05.2015 அன்று
மாலை 5.00 மணியளவில் அல்-அக்ஸா ஜாமிஆ மஸ்ஜித் 
வளாகத்தில் மவ்லானா மவ்லவி A.சபியுல்லாஹ் ஹஜ்ரத் 
அவர்கள் தலைமையிலும் முத்தவல்லி, மதரஸா நிர்வாகிகள்
 முன்னிலையிலும் நடைபெற்றது.
11270408_
சென்னை வடபழனி ஜாமியா மஸ்ஜித் தலைமை இமாம் 
மவ்லானா மவ்லவி அல்ஹாஜ் G.M.தர்வேஷ் ரஷாதி ஹஜ்ரத் 
அவர்கள் பேருரை நிகழ்த்தினார்கள்.

11221737_
அதை தொடர்ந்து மவ்லானா மவ்லவி ஹாபிழ் முஃப்தி 
அல்ஹாஜ் A.நூருல் அமீன் மன்பயீ ஹஜ்ரத் கடலூர் மாவட்ட
 அரசு காஜி அவர்கள் மாணவிகளுக்கு பட்டம் 
வழங்கி  சிறப்புரையாற்றினார்கள்.

இறுதியாக துஆவுக்கு பிறகு அல் அக்ஸா ஜாமியா மஸ்ஜித் இமாம் மவ்லவி ஹாஃபிழ் H.இம்தாதுல்லாஹ் நூரானி ஹஜ்ரத் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

அஞ்சுமன் மன்பஉல் பயான் மாணவ சொற்பயிற்சி மன்றம் நிறைவு விழா !!!

Posted: 27 May 2015 11:51 PM PDT

அஞ்சுமன் மன்பஉல் பயான் மாணவ சொற்பயிற்சி மன்றம் நிறைவு விழா 
12-05-2015 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
anjiman

மாநில மீலாது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!

Posted: 27 May 2015 11:47 PM PDT

29

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா (மார்க்க அறிஞர்கள்) சபை சார்பாக 25.04.2015 சனிக்கிழமை சிதம்பரம் ஈத்கா மைதானம் அருகே நடந்த மாநில மீலாது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..

1. இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கும் 'வேற்றுமையில் ஒற்றுமை' எனும் பாரம்பரிய கோட்பாட்டிற்கும் அண்மைக் காலமாகக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை இந்த மாநாடு கவலையோடு அவதானிக்கிறது. பொறுப்பிலுள்ள அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் முதலானோர் அரசியல் சாசனத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்குமாறு பேசுவதையும் அறிக்கைகள் வெளியிடுவதையும் மத்திய-மாநில அரசுகள் முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
2. வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதும் கலவரங்களைத் தூண்டும் வகையில் மேடைகளில் வெறியோடு உரையாற்றுவதும் அதையடுத்து கலவரங்களில் ஈடுபட்டு சிறுபான்மை மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் சேதம் விளைவிப்பதும் சமீப காலமாகத் தொடர்கதையாகிவிட்டன. இவற்றை மத்திய-மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கி, மத-மொழி சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்கிட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
3. இன்றையக் காலச் சூழ்நிலையில், முன்எப்போதும் இல்லாத அளவிற்குச் சமூக நல்லிணக்கத்திற்கும் சமுதாய ஒற்றுமைக்கும் பெரும் அச்சுறுத்தல் உருவாகியிருக்கிறது. அரசியல் மற்றும் சமூக அமைப்புகளும் சமயத் தலைவர்களும் இதைக் கருத்தில் கொண்டு, சமூக நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளையும் சமுதாய ஒற்றுமைக்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டுமாய் அனைவரையும் இம்மாநாடு கனிவோடு கேட்டுக்கொள்கிறது.
4. மார்க்கத்தின் வழிகாட்டிகளான உலமா பெருமக்கள் காலத்தின் கட்டாயம் கருதி, அறிவியல், தொழில்நுட்பம், பெரு நிறுவனங்கள் ஆகியவற்றால் விளைந்துள்ள கலாசார சீரழிவு, இளைஞர்கள் மற்றும் பெண்களின் மிகையான நாகரிகமோகம், குடும்பப் பாரம்பரியத்தின் சரிவு, தனிமனித ஒழுக்கக்கேடு ஆகியவற்றைத் திறனோடும் நுட்பத்தோடும் சீராக்க முன்வர வேண்டும் என்று இம்மாநாடு உரிமையோடு கேட்டுக்கொள்கிறது.
5. சமுதாயத்தின் இம்மை-மறுமை வெற்றி ஷரீஅத் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்வதில்தான் உள்ளது. எனவே, சமுதாயப் பெருமக்கள் ஷரீஅத் சட்டங்களைத் தங்கள் சொந்த வாழ்க்கையில் பின்பற்றுவதோடு, ஷரீஅத் சட்டங்களில் யாரும் கைவைத்துவிடாமல் கண் இமைபோல் பாதுகாத்திட ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என இம்மாநாடு அக்கறையோடு கேட்டுக்கொள்கிறது.
6.இன்று தமிழகத்தில் சிலர் ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்களின் அடையாளச்சி ன்னங்களாக இருந்து வரும் வரலாற்று அடையாளங்களை அழிக்க வேண்டும் என்று பேசிவருவதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது .அல்லாஹ்வின் திருப்பொருத்திற்கும் அல்லாஹ்வின் தூதர் நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பாராட்டிற்கும் இலக்கான நபித்தோழர்கள் , இஸ்லாத்திற்காக தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்பணித்த இமாம்கள் ,சான்றோர்கள் ஆகியவர்களை வசைபாடுவதை யும் அவமானப்படுத் துவதை யும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இம்மாநாடுவலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது
7..சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் விதமாகவும்,நல்லிணக்க எழுச்சி ஏற்படும் விதமாகவும் சமூக நல்லிணக்க மாநாடுகளை தமிழாகத்தின் எல்லா பகுதிகளிலும் நடத்த வேண்டுமாய் இஸ்லாமிய நன் மக்களையும் , மாவட்ட, வட்டார ஜமாஅத்துல் உலமா சபை யினரையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது
8 சொர்கத்தின் நறுமணமாகவும்,அல்லாஹ்வின் அருட்கொடையாகவும் கிடைக்கப்பெற்ற நமது ஆண் ,பெண் குழந்தைகளின் மார்க்க உணர்வுகள் இன்றைய நாகரீக காலத்தில் தேய்ந்து வருவதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மஹல்லாதோறும் மக்தப் மதரசாக்களை திறன்பட நடத்திட வேண்டும் எனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

மக்தப் மதரசாக்கள் செயல் படாத மஹல்லாகளில் மக்தப் மதரசாக்களை துவங்கிட விழிப்புணர்வு ஏற்படுதிட வேண்டு மெனவும் உம்மத்தையும் ஆலிம்களையும்இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

சிதம்பரத்தில் நடைபெற்ற ஜமாஅத்துல் உலமா சபையின் மாபெரும் மீலாது மாநில மாநாடு

Posted: 27 May 2015 11:40 PM PDT


22
சிதம்பரம் நகரில் ஈத்கா மஸ்ஜித் வளாகத்தில் 25.04.2015 அன்று தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மீலாது மாநாடு நடைப்பெற்றது நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஷைகுல் ஹதீஸ் மௌலானா ஏ .இ .எம் .அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் தலைமை வகித்தார் மாநில ஜமாஅத்துல் உலமா சபை கௌரவ தலைவர் மௌலானா டி .ஜெ .எம் சலாஹுத்தீன் ரியாஜி 
முன்னிலை வகித்தார்

25
தமிழக அரசின் வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் எம்.சி .சம்பத் மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளர் மௌலானா முஹம்மது ரிலா பாகவி ,பொருளாளர் மௌலானா முகமது காஸிம் பாகவி தமிழக வக்பு வாரியத் தலைவர் தமிழ் மகன் ஹுசைன் ,கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் லால்பேட்டை ஜெ .எம்.ஏ .அரபுக் கல்லூரி முதல்வர் மௌலானா ஏ .நூருல் அமீன் ,மௌலானா தளபதி.ஏ .ஷபிகுர் ரஹ்மான் , இலங்கை மௌலானா அப்துல் காலிக் ,மௌலானா முர்ஷித் அஹ்மது ,மௌலானா தர்வேஷ் ரஷாதி ,சேலம் மௌலானா அபூதாஹிர் ,சென்னை மௌலானா கான் பாகவி ,மௌலானா சதிதுத்தின் பாகவி ,மௌலானா தேங்கை ஷர்புதீன் ,மௌலானா இஸ்மாயில் நாஜி ,மௌலானா சபியுல்லா ,மௌலானா அப்துர் ரஜாக் ,மௌலானா ஏ .ஆர்.சலாஹுதீன் ,மௌலானா காஜா முஹைனுதீன் பாகவி ,சிதம்பரம் வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஆர்.ஜியாவுதீன் செயலாளர் முஹம்மது அலி மற்றும் உலமாக்கள் சமுதாய பிரமுகர்கள் ,ஜமாஅத்தார்கள் திரளானோர் பங்கேற்றனர் .

16
விழாவிற்கான ஏற்பாட்டை மாநில ஜமாத்துல் உலமா சபையினரும் ,சிதம்பரம் வட்டார ஐக்கிய ஜமாஅத்தினரும் சிறப்பாக செய்திருந்தனர் .
சிறப்பு அமர்வுகளாக MYM ஃபைஸல் மஹாலில் பெண்களுக்கு ஓர் நிகழ்சிசி வெள்ளிக்கிழமை (24.04.2015) மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும், ஆலிம்களுக்கு மட்டும் சிதம்பரம் லால்கான் பள்ளிவாசலில் நேற்று (25.04.2015 சனிக்கிழமை) பகல் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
27
20
21

23
24
25

26
19
18

17
16
15

14
13
6

7
8
9

10
11
12

1
2
3

4
5
26

27
28
29  
30

புனிதமிகு புகாரி ஷரீப் 39-ஆம் ஆண்டு நிறைவு விழா துஆ மஜ்லிஸ் நடைபெற்றது

Posted: 27 May 2015 11:29 PM PDT

buhari

IMG-20150421-WA0002

புனிதமிகு புகாரி ஷரீப் 39-ஆம் ஆண்டு நிறைவு விழா துஆ  மஜ்லிஸ், 22.04.2015 திங்கள் மாலை செவ்வாய் இரவு 9 மணியளவில், ஜாமிஆ தாருல் தப்ஸீர் கலைகூடத்தில், ஜாமிஆ முதல்வர் மவ்லவி அல்ஹாஜ் ஏ.நூருல் அமீன் ஹழ்ரத் 
தலைமையில் நடைப்பெற்றது.

11148441_880


மவ்லவி அல்ஹாஜ் எஸ்.ஏ.அப்துர் ரப் ஹழ்ரத் முன்னிலை வகித்தார்கள், மவ்லவி அல்ஹாஜ் ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத், பாகியாதுஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவி அல்ஹாஜ் அப்துல் ஹமீது ஹழ்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

1111250336


இறுதியாக ஜாமிஆ முதல்வர் ஏ.நூருல் அமீன் ஹழ்ரத் திக்ரு செய்து துஆ செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஜாமியாவின் பேராசிரியர்கள், உலமாக்கள் மற்றும் ஊர் பொது மக்கள் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.


17667_88085

விபத்தில் மரணமடைந்த ஆலிம்குடும்பங்களுக்கு தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது!

Posted: 27 May 2015 11:22 PM PDT


18116_4721389162
பள்ளப்பட்டி அருகே நடந்ந சாலை விபத்தில் வஃபாதான ஆலிம்கள்உட்பட 9 பேரின் குடும்பத்தார்களுக்காக கடந்த 10-4-2015 அன்று ஜாமிஆவில் வசூல் செய்யப்பட்ட நிதியை தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மூலம் 16-4-2015 அன்று வழங்கப்பட்டது நிதி உதவி செய்த மற்றும் அதற்காக முயற்சிகள் செய்த அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலியை தந்தருள்வானாக. ஆமீன்.

11092141_4721389

சாலை விபத்தில் வஃபாத் ஆன ஆலிம்களுக்கு ஈசால் சவாப் செய்யப்பட்டது !!!

Posted: 27 May 2015 11:17 PM PDT

IMG-20150406-WA0001
3.4.2015-அன்று சாலை விபத்தில் வஃபாத்தான ஆலிம்களுக்கு அவர்களின் மஃபிரத்திற்காக, லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில், 6.4.2015  அன்று காலை சுப்ஹூ தொழுகைக்கு பின்பு, குர்ஆன் ஷரீப் ஓதி அவர்களுக்காக ஈசால் சவாப் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜாமிஆவின் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் லால்பேட்டை நகர ஆலிம் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

IMG-20150406-WA0002

IMG-20150406-WA0003

சாலை விபத்தில் வஃபாத்தான பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபிக்கல்லூரியின் உலமாக்களுக்கு லால்பேட்டையில் துஆ மஜ்லிஸ்.

Posted: 27 May 2015 11:12 PM PDT

சாலை விபத்தில் வஃபாத்தான பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபிக்கல்லூரியின் உலமாக்களுக்கு லால்பேட்டையில் துஆ மஜ்லிஸ்.
11069870_870903
சாலை விபத்தில் வஃபாத்தான மக்தூமிய்யா அரபிக்கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவர்கள் மோதினார் ஆகியோரின் மறுமை வாழ்வின் உயர்வுக்காக 3.4.2015 அன்று லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் JMA அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லானா ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்களின் தலைமையில் துஆ மஜ்லிஸ் நடைப்பெற்றது. அவ்வமயம் JMA அரபிக்கல்லூரியின் பேராசிரியர்கள் மாணவர்கள் நகர ஜமாஅத்துல் உலமா சபையின் உலமாக்கள் ஜமாஅத்தார்கள் ஆகியோர் பங்கேற்று 
யாஸீன் ஒதி துஆ செய்தனர்.

லால்பேட்டை சிங்கார வீதி,ஜன்னத் நகரில் இன்று 3-4-2015 வெள்ளிகிழமை காலை 7 மணியளவில் புதிய பள்ளிவாசாலுக்கான கிப்லா அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.

Posted: 27 May 2015 11:07 PM PDT

லால்பேட்டை சிங்கார வீதி,ஜன்னத் நகரில் இன்று 3-4-2015 வெள்ளிகிழமை காலை 7 மணியளவில் புதிய பள்ளிவாசாலுக்கான கிப்லா அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
20150402205927

இவ்விழாவிற்கு தலைமை தாங்கிய மொளலானா மொளலவி,அல்ஹாஜ்,காரி,முப்தி A.நூருல் அமீன் ஹஜ்ரத் கிப்லா அவர்களால் கிப்லா வைக்கப்பட்டது 

20150402212713


தாருல் முத்தகீன் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கடைசியாக புதிய பள்ளிவாசல் நன்முறையில் நிறைவு பெற இறைவனிடம் துஆ செய்தனர்.


11081155_872641792801157_2458504871650103724_n

கருத்துகள் இல்லை: